போலீசார் அனுமதி மறுப்பு பணிமனையில் முடிந்த பிராசரம்

பல்லடம்: பல்லடம் சட்டசபை தொகுதியில், நான்கு முனை போட்டி என்று கூறப்பட்டாலும், தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி நிலவுகிறது.

தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளராக பரமசிவம் ஆகியோர் களத்தில் உள்ளனர். வெற்றியை கைப்பற்ற இருவரும் கடுமையான களப்பணி ஆற்றி உள்ளனர். தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கடைசி நாளான நேற்று, என்.ஜி.ஆர். ரோட்டில் பிரசார த்தை நிறைவு செய்ய இரண்டு கட்சி வேட்பாளர்களும் திட்டமிட்டு இருந்தனர்.

மதியம், 3.00 மணிக்கு தி.மு.க.வும், தொடர்ந்து, 4.00 மணிக்கு அ.தி.மு.க.வும் பிரசாரம் மேற்கொண்டு நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இரு கட்சியினரும் வாகன பேரணியாக வந்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், இரு வேட்பாளர்களும் இறுதி கட்டப் பிரசாரத்தை பணிமனையிலேயே நிறைவு செய்தனர். இதேபோல், நா.த.க. வேட்பாளர் தமிழினியன், நாரணாபுரத்திலும்; த.வெ.க. வேட்பாளர் ராம்குமார், அம்மாபாளையம் பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

Advertisement