அவிநாசியில் முருகனின் வெற்றி உறுதி ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி பேச்சு
அவிநாசி: அவிநாசி தொகுதியில், பா.ஜ.வேட்பாளராக போட்டியிடும், முருகனுக்கு ஆதரவாக, ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில், ஹிந்து முன்னணியினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதுதான் எங்களின் தேர்தல் பிரசாரம். ஒட்டு மொத்த மக்களும் பாதுகாப்பு இல்லாத பயத்தின் உச்சத்தில் உள்ளனர்.
தி.மு.க. ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி இல்லை என முதல்வர் கூறுகிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். தி.மு.க. என்றாலே ஹிந்து விரோதம் தான்.
தமிழகத்தில் வெவ்வேறு காரணங்களை காட்டி, 175க்கும் மேற்பட்ட கோவில்களை தி.மு.க. அரசு இடித்துள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற அரசு தடை விதித்துள்ளது.
இதன் வாயிலாக எந்த அளவு தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு அவர்களுடைய வழிபாட்டு முறைக்கும் எதிராக உள்ளது என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் வினியோகித்து வரும், தமிழர்கள் சிந்தனைக்கு என்ற துண்டு பிரசுரங்கள் வாயிலாக, தி.மு.க. அரசு இந்துக்களுக்கும், ஹிந்து மத வழிபாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எவ்வாறு எதிரியாகவும் பிற மத வழிபாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை இந்துக்களுக்கு தராமல் அலட்சியப்படுத்துகிறது என்பதையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டு சென்று வருகிறோம்.
சிறு வயது குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடுவதும், பள்ளி செல்லும் சிறுவர்கள் கையில் சாதாரணமாக புழங்கும் கஞ்சா பழக்கம், டாஸ்மாக் உள்ளிட்ட பிரச்னைகளையும், தனியாக வசிக்கும் தம்பதிகளை குறி வைத்து கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போன்ற நிகழ்வுகளையும் பொதுமக்களிடத்தில் பதிவு செய்து வருகிறோம். இதனை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பையும், கோபத்தையும், எதிர்பையும் தி.மு.க. அரசு சம்பாதித்துள்ளது. எனவே, அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன், பல ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை