உங்களுக்கு சேவை செய்ய உத்தரவிடுங்கள் அவிநாசி தி.மு.க. வேட்பாளர் உருக்கம்

2

அவிநாசி: தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று மாலை, அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள செங்காட்டு திடலில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு, வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி பேசியதாவது:

அவிநாசி தொகுதியில் கடந்த, 10 ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த தனபால், என்ன செய்தார். யாரும் அவரை பார்த்ததில்லை. அதேபோல, முருகனையும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் ஊர் பெண்ணாக, மகளாக, சகோதரியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். எனவே என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்து உங்கள் தேவைகளுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களுக்கு சேவை செய்ய எனக்கு நீங்கள் உத்தரவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பிரசாந்த்குமார், மா.கம்யூ. மூத்ததலைவர் முத்துசாமி, ம.ம.க. நிர்வாகிஅபுசாலி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement