சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
திட்டக்குடி: திட்டக்குடி அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது சாலை விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் ஆசைத்தம்பி, 20. இவரது உறவினர் திட்டக்குடி பெரியார் நகர் குமார் மகன் விக்ரம், 19, என்பவருடன் டி.என். 91 - எக்ஸ். 0913 என்ற பதிவெண் கொண்ட பைக்கில் நேற்று மாலை 5:00 மணியளவில் பெருமுளை அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு திட்டக்குடி - ஈ.கீரனுார் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே பின்னால் வந்த டி.என். 91 - எக்ஸ். 9290 பதிவெண் கொண்ட வேன் மோதியது. படுகாயமடைந்த இருவரில் பைக் ஓட்டிச் சென்ற ஆசைத்தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த விக்ரமை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை