த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
சென்னை: இறுதி கட்ட பிரசாரத்தை, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று சென்னை நந்தனத்தில் மேற்கொண்டார்.
பின், பிரசார வாகனத்தில், அவர் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது, வழியில், சோழிங்கநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட, பாலவாக்கம் பகுதியில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து விடக்கூடாது என நினைத்து, முன் இருக்கையில் இருந்து, பின் இருக்கைக்கு விஜய் மாறினார். ஆனால், தி.மு.க., கூட்டணி கட்சியினர், விஜய் வாகனத்தை நோக்கி, உற்சாகமாக ஓடி வந்தனர்.
இதனால், மீண்டும் முன் இருக்கைக்கு வந்தார். விஜயை பார்த்த மகிழ்ச்சியில், 'செல்பி' எடுக்க, அவரது வாகனத்தை நோக்கி சிலர் பாய்ந்தனர்.
தங்களிடமிருந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடியை பிடித்தபடி, விஜயை நோக்கி கை அசைத்தனர். இளைஞர் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் படத்தை காண்பித்தார்.
பலர் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர். இது தொடர்பான வீடியோவை, த.வெ.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
காசுக்கு கூடிய கூட்டம் விஜயை பார்த்ததும் காசு வாங்கினதை மாறந்து விட்டது
இதுதான் அவரை பார்த்து கூடும் கூட்டம் அவருக்கு ஓட்டு போடாது என்பது தெளிவாக்குகிறது.
இது தான் திமுக vck கொடி பிடித்தவன் கூட விஜய்க்கு தான் போடுவான் என்பதை தெளிவாக்குகிறது .
ஐயோ பாவம் சரண், இந்த அளவுக்கு அப்பாவியா இருக்கக்கூடாது.. அந்த கட்சி கொடி பிடிச்சிருக்குறவன் அன்னிக்கி காசுக்காக கொடி பிடிச்சிருக்கான். அடுத்தநாளைக்கு வேறுஒரு கட்சி கொடி பிடிப்பான். ஆனால் ஒட்டு கொடி பிடிக்கிற கட்சிக்கு போடமாட்டான். இது சீசன் பிழைப்பு. கொஞ்சம் வெளி உலகத்துக்கு வாங்க.
ரெண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை பார்த்தாச்சு. போதும் இவங்க ஆண்ட லட்சணம். இருப்பதிலேயே படு மட்டமான ஆட்சி ஜெயலலிதா 1991-1996 தனி மனித துதி, ஊழல், வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம், கருணாநிதி 2006-2011 நில அபகரிப்பு 2ஜி, இலங்கை தமிழர் படுகொலை துணைநிற்ப்பு, எல்லா வாரிசுகளும் எம் பி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் அழகிரி மத்திய அமைச்சர், தயாநிதி ஜவுளி, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மற்றும் காட்டாட்சி மற்றும் ஸ்டாலின் 2021-2026 மின்சார கட்டணம், பால், நிலவரி, சொத்துவரி, குடிநீர்வரி, பத்திரப்பதிவு கட்டணம், விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, கொலை கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாட்லுக்கு பத்து ருபாய் ஊழல், பாட்டிலே கலால் வரி காட்டாமல் நேராக முதல் குடும்பத்துக்கு ஊழல் பணம் சேர்வது, போதை பொருள் நடமாட்டம், அமைச்சர்களின் ஆணவ பேச்சு ஜாதி வெறி பொன்முடி, ஏ வ வேலு, ராஜகண்ணப்பன், சாத்துர் ராமசந்திரன், சேகர்பாபு, உதயநிதி சனாதன எதிர்ப்பு பேச்சு, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசிங்கம் கலந்தது, கோவை குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சிறுபான்மை அரசியல் செய்தது, ஆளுநரை அவமானப்படுத்தியது நடக்கத்தை நடந்ததாக சொல்லுமாறு உரை எழுதி கொடுத்தது தனி மனித ஒழுங்கீனமான விமர்சனம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாச பேச்சு கள்ளச்சாராய சாவை விஷ சாராய சாவு என்று மாற்றி நம்பவைத்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஊழலில் அராஜகத்தில் ஆணவத்தில் அதிகார துஷ்ப்ரயோகத்தில் கருணாநிதியையே மிஞ்சிவிட்டார் ஸ்டாலின். கருணாநிதியே பரவாயில்லை என்று சொல்லவைத்துவிட்டார். விஜய் தான் அடுத்த தேர்வு.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
ஆக திமுகவுக்கு இப்போதைய எடப்பாடி அதிமுக எவ்வளவோ 100 மடங்கு பரவாயில்லைன்னு தெளிவா சொல்லிடீங்க.
இதுதான் விஜய் கூட்டத்தின் ரகசியம்
இது தான் நிலவரம். வோட்டுக்கு விஜய் . திமுகவுக்கு 24 ம் தேதி மரணம் , மே 4 ம் தேதி பத்தாம் நாள் சடங்கு .
விஜய் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக அமர அதிக வாய்ப்பு.
மூன்று பொண்டாட்டி வெச்சிருந்தவரு, பொன்னு என்னோடது ஆனா அவங்க அம்மா? ன்னு கேட்டவரோட கட்சிக்கார் விஜயை "பொண்டாட்டிய தவிக்க விட்டவர்ன்னு" கருத்து போடறாரு....
இது என்ன திமுகவின் கூட்டணிக்கு வந்த சோதனை.
திமுகவின் பி டீம் ..... அதை பார்த்து த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம் அடைய மாட்டாங்களா >>
அப்படியே உங்கள் வாக்குகளையும் TVKக்கு அளித்து விடுங்கள் ரசிக மணி குஞ்சுகளே .மேலும்
-
தேர்தலின்போது விழிப்புடன் இருங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஆந்திர முன்னாள் முதல்வர் பாஸ்கர் ராவ் காலமானார்
-
கோவையின் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனிடம் மனு
-
பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் பயிற்சி முகாம்
-
மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
-
அதிகாரிகள் இல்லாத மண்டல அலுவலகத்தில் த.வெ.க., போராட்டம்