கோவையின் 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனிடம் மனு

1

சென்னை:''கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால், அத்தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்,'' என, தேர்தல் கமிஷனிடம், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மனு அளித்துள்ளது.

அதன் தலைவர் ஈஸ்வரன் அளித்துள்ள மனு:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், ஓட்டுக்காக பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல், பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த வேட்பாளரும் கைது செய்யப்படவில்லை; எந்த தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

கோவை மாவட்டத்தில், மாபெரும் ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement