மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
எண்ணுார்:மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த ஆட்டுக்குட்டியை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
எண்ணுார், உலகநாதபுரம் அருகே, நேற்று காலை, மழைநீர் செல்லும் வகையில் கட்டப்பட்டிருக்கும் கால்வாயில், ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது. அக்கம் பக்கத்தினர், ஆட்டுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டு மீட்க முயற்சித்தனர்.
ஆனால், 6 - 8 அடி உயரத்தில் இருந்த கால்வாய் சுவர்களை தாண்டி இறங்கி, ஆட்டுக்குட்டியை மீட்க முடியவில்லை. இது குறித்து, எண்ணுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ராட்சத கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கால்வாய்க்குள் இறங்கி, ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement