அதிகாரிகள் இல்லாத மண்டல அலுவலகத்தில் த.வெ.க., போராட்டம்
திருவொற்றியூர்:பண பட்டுவாடாவை தடுக்கக்கோரி, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழக வெற்றி கழக வேட்பாளர், கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் தொகுதி, த.வெ.க., வேட்பாளர் செந்தில்குமார் நேற்று மதியம், திடீரென, கட்சியினர் 50 பேருடன், திருவொற்றியூர் மண்டல அலுவலகம் வந்தார்.
ஓட்டுக்கு, தி.மு.க.,வும், - அ.தி.மு.க., பண பட்டுவாடா செய்வதை, தேர்தல் அதிகாரிகள் தடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி அறை முன் அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஓட்டுப்பதிவு இன்று நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப் பெட்டிகளை ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், மண்டல அலுவலகத்தில் யாரும் இல்லை. த.வெ.க.,வினரை போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை