தேர்தலின்போது விழிப்புடன் இருங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை:'' ஏப் 23 ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், தி.மு.க.,வினர் விழிப்புணர்வுடன் இருந்து பணியாற்ற வேண்டும்,'' என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க.,வினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழக மக்கள் நம்முடன் இருக்கின்றனர். தமிழகத்தின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். கடந்த மார்ச் 31ல் திருவாரூரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினேன்; இம்மாதம் 21ல் கொளத்துாரில் நிறைவு செய்திருக்கிறேன். கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும், தி.மு.க.,வினர் கடுமையாக உழைக்கின்றனர். தேர்தல் களத்தில் தி.மு.க.,வை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு.

கூட்டணி கட்சியினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட தொண்டர்களின் அயராத உழைப்பு, ஓட்டுப்பதிவான நாளான இன்றும் விழிப்புடன் தொடர வேண்டும்.

இத்தனை நாட்கள் கடுமையாக பணியாற்றியதை விட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.,வை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement