அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
கோவை: அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கோவை கணபதியில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை வடக்கு தொகுதி பா.ஜ.,வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.
கணபதி சிவசக்தி காலனியில் துவங்கி, பாரதி நகர், விளாங்குறிச்சி சாலை, மணியகாரம்பாளையம், கண்ணப்ப நகர், கிருஷ்ணம்மாள் வீதி வழியாக வாகன பேரணி சென்றது.
அண்ணாமலையுடன், வானதி ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்று வாக்காளர்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். வாக்காளர்கள் மலர்துாவி ஆரவாரம் செய்தனர்.
அப்போது, அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கருத்து கணிப்பு நமக்கு சாதகமாகியுள்ளது. மத்திய அரசு நிதியை பயன்படுத்தும் அரசு மாநிலத்துக்கு வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
தி.மு.க. வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. செந்தில் பாலாஜி எப்போது அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார். நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி பேசுவார். ஏப். 23 அன்று மக்கள் அவரது முகத்திரையை கிழிப்பார்கள்.
தேர்தல் கமிஷன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், அதற்கு போதுமான அதிகாரிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதோடு, அவர்களது பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெளியூர்காரர்களை கோவையிலிருந்து வெளியேற்ற வேண்டும். கோவை வடக்கு தொகுதியில், 5,000 ரூபாய் அல்ல எவ்வளவு அதிக பணம் கொடுத்தாலும் வானதியை தோற்கடிக்கமுடியாது. அவரது வெற்றி வாக்காளர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
she is lawyer, annamalai is IPS. These professionals are breaking rules.
where is Traffic police.
Where is Court
Where is Indian rule
Rules only for public not fot for politicians. and VIPS.
What medias doing.
Where is the Minister inge of Police. Why police had not ged these two people?
தேர்தல் முடிந்தபின் அண்ணாமலை எனக்கு அப்படி, இப்படி பண்ணினார் என்று வானதி சொல்லாமல் இருந்தால் சரி.
ஒரே வண்டியில்
இது மிக பெரிய நாடகம். இது தான் அரசியல், வானதிக்கு மனம் உறுத்தும் தானே? அண்ணாமை முதிர்சசி பாராட்டுக்குரியது. தன் வினை தன்னை சுடும், வீட்டு அப்பம் ஓட்டை சுடும். இது சத்தியம்.
தலைக்கனம் அதிகம் அதனால் தலைக்கவசம் தேவை இலலை
தி மாடல் அரசில் போலீஸ்காரர்கள் வண்டியின் பின்புறம் பயப்பிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அபராதம் விதிக்காமல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை எல்லோரும் சொல்கிற மாதிரி B டீமோ
வானதி அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவேண்டும். அணியாதது தவறு. ஆனால் இப்போதெல்லாம் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களில் பெரும்பாலோர் ஹெல்மெட் அணிவது இல்லை. காவல் துறையும் அவர்களைப்பிடித்து அபராதம் விதிப்பதும் இல்லை.
பள்ளம் இருந்திருந்தால் தள்ளி விட்டு இருப்பார்.
சார், இதெல்லாம் அரசியல்ல சாதாரணப்பாமேலும்
-
ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா
-
சர்க்கரை ஆலைகளுக்கு புதிய சட்டம்: மே 20 வரை கருத்து தெரிவிக்கலாம்
-
இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்கள் பயணம் துப்பாக்கி போலீஸ் கட்டுப்பாட்டில் மையங்கள்
-
தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் விடுமுறை கடந்த 20ல் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
-
கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வி வேலைவாய்ப்பு நிகழ்ச்சி
-
டில்லியில் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப மாநாடு