தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது

2


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 14ஆயிரம் ரூபாய்க்கும். கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 14ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்



வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு சவரன் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement