ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து

3

ஓசூர்: ஓசூர் அருகே கார் மற்றும் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.


கிருஷ்ணிகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பெங்களூரில் இருந்து பொன்னகரம் நோக்கி வந்த காரும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.


இவர்கள் நாளை ஓட்டு போடுவதற்காக காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் சதீஷ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.



நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement