தமிழகத்தில் இன்று தேர்தல்; ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

6

நமது சிறப்பு நிருபர்



தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஓட்டளித்து ஜனநாயக கடமை ஆற்ற மக்கள் அனைவரும் தயாராக இருக்கின்றனர். ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது குறித்து ஓர் சிறப்பு அலசல்!



தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. ஓட்டுச்சாவடிக்கு வெளியே மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பதற்கு தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் முதல் முறையாக 15 நிமிடம் போன் இல்லாமல் இருக்க போகிறோம்.


தேர்தல் அதிகாரியிடம் போனை சுவிட் ஆப் செய்து கொடுத்துவிட்டு மறக்காமல் டோக்கன் வாங்கி கொண்டு ஓட்டுச்சாவடிக்குள் செல்ல வேண்டும். முதலில் தேர்தல் அதிகாரி அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்ப்பார். இரண்டாவது ஒரு தேர்தல் அதிகாரி, இடது கை ஆள் காட்டி விரலில் மை வைப்பார். ஒரு கையெழுத்து போட்டுவிட்டு அவரிடம் இருந்து சிலிப்-ஐ வாங்கி கொள்ள வேண்டும்.


மூன்றாவது ஒரு தேர்தல் அதிகாரி, சிலிப் வாங்கி கொண்டு மிஷினில் பட்டனை அளித்து ஓட்டளிக்க அனுமதி அளிப்பார். அப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்த வேட்பாளர் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அளித்த வேண்டும். ஒரு சின்ன ஒலி வரும்.

நீங்கள் மிஷினில் நீங்கள் போட்ட சின்னம் சரியாக விழுந்து இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து முடித்தால் நாம் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றிவிடலாம். வெளியே வந்து டோக்கன் கொடுத்து தங்களது மொபைல் போனை வாங்கி கொள்ளலாம்.

வீடியோ பார்க்க



ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது குறித்து பிரத்யேக வீடியோ ஒன்று தினமலர் சமூக வலைதளம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிப்போம்; ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.

Advertisement