கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் கொடியேற்று விழா
ஆண்டிபட்டி:ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவிழா கொடியேற்று விழா நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 800 ஆண்டுகளைக் கடந்த பழமையான இக்கோயிலின் சித்திரை திருவிழா கோயில் செயல் அலுவலர் சுதா தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
நிகழ்ச்சியை முன்னிட்டு ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் வாசாந்தி நிகழ்ச்சிக்குப் பின் ஆழ்வார்கொடிப் பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி திருத்தேர் எழுந்தருளலும், மே 1, 2 தேதிகளில் தேரோட்டமும் நடைபெறும். மே 3ல் சப்தாவர்ண நிகழ்ச்சியில் சுவாமி பூ பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement