ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார்.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவை துவக்குதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம், ஓட்டுச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், முகவர்களை அமர வைத்தல், படிவங்களை நிரப்புதல், ஓட்டு எண்ணிக்கையை தெரிவித்தல், வி.வி.பாட்., இயந்திரத்தில் சேகரமாகும் சீட்டுகளை சேகரித்தல், சீல் வைத்தல் குறித்து இறுதிகட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து, பணி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது டி.ஆர்.ஓ., ஜீவா, தாசில்தார் சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.பணி ஆணை பெற்ற ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் நேற்று மதியமே தங்களது ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று தங்கினர்.

Advertisement