தேயிலை செடிக்குள் பதுங்கிய சிறுத்தை: வால்பாறை வாழைத்தோட்டம் மக்கள் பீதி

வால்பாறை: வால்பாறை நகரில் தேயிலை செடிக்குள் பதுங்கி குழந்தைகளை நோட்டமிட்ட சிறுத்தையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அதிக அளவில் வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே அவ்வப்போது நடமாடும் சிறுத்தைகள் தற்போது மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் வரத்துவங்கியுள்ளது.

வால்பாறை வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியை ஒட்டி தேயிலை செடிகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 22 மாலை, 5:00 மணிக்கு தேயிலை செடிக்குள் பதுங்கிய சிறுத்தை, வீடுகளின் முன்பாக விளையாடிக்கொண்டிருப்பதை நோட்மிட்டது. இதை கண்ட பொதுமக்கள் குழந்தைகளை பத்திரமாக வீட்டிற்குள் அனுப்பிவிட்டு, சிறுத்தையை விரட்டினர்.

பொதுமக்கள் கூறுகையில், 'வாழைத்தோட்டம் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள் ஜோடியாக உலா வருகின்றன. குடியிருப்பு பகுதி அருகே மாலை நேரத்தில் தினமும் சிறுத்தை வந்து செல்வதால், குழந்தைகள் வெளியில் நிம்மதியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியின் பின்பக்கம் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை அந்த வழியாக நடந்து செல்ல அதிக அளவில் வாய்ப்புள்ளது. எனவே வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள், குழந்தைகளை மாலை நேரத்தில் வீட்டிற்கு வெளியில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

@block_B@

சாலையில் ஒற்றை யானை!

வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் புதுத்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை ஒற்றை யானை சாலையில் முகாமிட்டது. இதை கண்ட சுற்றுலா பயணியர் யானையை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். 10 நிமிடத்திற்கு மேலாக யானை ரோட்டின் குறுக்கே நின்றது. அப்போது, வாகனங்கள் செல்லாமல், அமைதியாக நிறுத்தப்பட்டன. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.block_B

Advertisement