வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
பொள்ளாச்சி: எலும்பு பலவீனமாக இருப்பதாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகளில் பலர், வெயிலில் விளையாடாததால், இயற்கையாக உடலுக்கு கிடைக்கும் 'வை ட்டமின் டி ' சத்து பற்றாக்குறை இருப்பவர்களாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வளரும் பருவத்தில், எலும்பு பலவீனமடைந்து சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல், வயதுக்கேற்ற உயரம் இல்லாமை, பல் முளைப்பதில் தாமதம், சீக்கிரம் பற்கள் உடைதல், தசை பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்காக சமீப காலமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கு சூரிய வெயிலில் சிறிது நேரம், குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டுமென, டாக்டர்கள் தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவமனை இயன்முறை சிகிச்சை பிரிவு மருத்துவர் பத்மராணி கூறுகையில், ''கால்சியம் சத்து உறிஞ்ச 'வை ட்டமின் டி ' அவசியம். தினசரி காலை 20-30 நிமிடங்களாவது, குழந்தைகள் சூரிய ஒளியில் விளையாடுவது அவசியம்.
சத்தான உணவுடன், வெயிலில் சிறிது நேரம் விளையாட அனுமதிப்பது, சில உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். வளரும் பருவத்தில் எலும்புகள் சீக்கிரம் பலமாகிவிடும்,'' என்றார்.
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்