'கோவையில் வெயில் இன்னும் அதிகரிக்கும்'

பொள்ளாச்சி: அனல் தகிக்கும் தேர்தல் பிரசாரம் முடிந்திருக்கலாம். ஆனால், கோவை மாவட்டத்தில், வெயிலின் தகிப்பு கூடும் என, வானிலை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் , 26ம் தேதி வரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். எனினும், அதிகபட்ச வெப்பநிலை, 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் (102.2 டிகிரி பாரன்ஹீட்) வரை பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

சில பகுதிகளில் தூறல் மழையை எதிர்பார்க்கலாம். காற்றில் வெப்பத்தின் அளவு உயர்ந்து காணப்படும். மதியம் 1:00 முதல் மாலை 3:00 மணி வரை அதிக வெப்பம் காரணமாக, சுழல் காற்று வீசக்கூடும் என்பதால், வாழைக்கு முட்டுக்கொடுப்பது நல்லது, என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Advertisement