பஸ் ஸ்டாண்ட் இல்லை: போக்குவரத்து நெருக்கடி

உடுமலை: உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும் டவுன் பஸ்கள் இந்த ஊருக்கு செல்கின்றன.

ஆனால், அங்கு பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. இதனால், பஸ் நிறுத்த இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement