வாக்காளர் அட்டை இல்லையா? 12 ஆவணங்களை காட்டி ஓட்டுப்பதிவு செய்யலாம்

2

- நமது சிறப்பு நிருபர் -

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில், 'பூத் ஸ்லிப்' வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பூத் ஸ்லிப்புடன், வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி புகைப்படம் எடுப்போர் மீது, அதிகபட்சமாக மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

Latest Tamil News

Advertisement