டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றத்தை காட்டும் 'மொமெண்டம் இண்டிகேட்டர் ' கள்

இறக்கத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து இறக்கத்திலேயே நடைபெற்ற நிப்டி நாளின் இறுதியில், 198 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.53 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.29 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.89 சதவீத இறக்கத்துடனும்; நிப்டி கெமிக்கல்ஸ் குறியீடு அதிகபட்சமாக 0.97 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Latest Tamil News

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

வர்த்தகம் நடந்த 3,396 பங்குகளில் 1,923 ஏற்றத்துடனும்; 1,355 இறக்கத்துடனும்; 118 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியை பொறுத்தவரை 100 மற்றும் 200 நாள் (இஎம்ஏ) சராசரிகளுக்கு கீழே இருப்பதை தவிர, ஏற்றம் காண்பதற்கு வேறெந்த டெக்னிக்கல் ரீதியான தடங்கல்களும் இல்லை. புதன் கிழமை கண்ட இறக்கத்திற்கு பிறகும் கூட 'மொமெண்டம் இண்டிகேட்டர்கள்' சிறியதொரு ஏற்றத்திற்கு சாதகமாகவே இருக்கின்றன. 24,450ஐ கடந்து மேலே சென்றால் 24,800 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கவே செய்கிறது. இறக்கம் வந்தால் 23,900 என்ற லெவலில் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 'ஸ்டொக்காஸ்டிக்ஸ்' சற்று ஓவர் பாட்டாக இருப்பது மற்றும் செய்திகளின் ஆதிக்கம் தொடர்வது போன்ற காரணங்களினாலேயே எதிர்பாராத திடீர் திருப்பங்கள் அவ்வப்போது வந்துபோகிறது.

Advertisement