'மினிமம் பேலன்ஸ்' அபராத வசூல் 3 ஆண்டுகளில் ரூ.19,083 கோடி

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய வங்கிகள் கிட்டத்தட்ட 19,083 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளன. 'ஹெச்.டி.எப்.சி.,' வங்கி அதிகபட்சமாக 3,871 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 'ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் பேங்க் ஆப் பரோடா' ஆகிய முன்னணி வங்கிகளும், இந்த அபராதம் வாயிலாக தலா 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளன.

ஒட்டுமொத்த தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 10,991 கோடி ரூபாயும், பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட 8,092 கோடி ரூபாயும் வசூலித்துள்ளன. 'பி.என்.பி.,' வங்கி கடந்த 2025, ஜூலை 1ம் தேதி முதல் இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளது. இருப்பினும், அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,577 கோடியை வசூல் செய்துள்ளது.'எஸ்.பி.ஐ.,' சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதில்லை என்றாலும், நடப்பு கணக்குகள் வாயிலாக 932 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Advertisement