வாட்டி வதைக்கும் வெயில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதனால், பொதுமக்கள் பலரும், மதியம், 12:00 முதல், மாலை, 4:00 மணி வரை
வெளியே வராமல், வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால், சாலையில் மக்கள் நடமட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், விவசாயம், கட்டட தொழிலாளர்களும் வேலை செய்ய முடியாமல்
தவிக்கின்றனர்.
அதன் காரணமாக, நீர் பற்றாக்குறை, கோடைகால நோய்,
வெப்ப அழுத்த அபாயம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து
தப்பிக்க, அதிக தண்ணீர் குடிக்கவும், மதிய நேரத்தில் வெளியே செல்வதை
தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்போதே
வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இன்னும், 12 நாட்களில், கத்தரி வெயில்
துவங்க உள்ளதால், வெயிலை எப்படி சமாளிப்பது என
தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு