ஓட்டுச்சாவடி மையம் முற்றுகை: மக்கள் போராட்டம்

பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அருகே, பாலம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை மீட்கக்-கோரி கிராம மக்கள், ஓட்டுச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்-டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, கும்-மனுார் பஞ்., பாலாம்பட்டி தோப்பு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம், இரண்டே முக்கால் ஏக்கர் உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த, 7 பேர் கடந்த, 10 வருட-மாக ஆக்கிரமித்து கொண்டு, அப்பகுதி மக்க-ளுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்-துள்ளனர்.
குறிப்பிட்ட அரசு புறம்போக்கு நிலம் வழியாக, கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சாலை அமைக்க நிலத்தை மீட்டு தரக்கோரி, அப்பகுதி மக்கள் பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன், பாலக்-கோடு தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றில் கடந்த, 5 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவ-டிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, 100க்கும் மேற்பட்டோர் பாலாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், அரசு நிலத்தை மீட்டு தரக்கோரி, தர்ணா மற்றும் முற்-றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்று நடக்கும் தேர்தலை புறக்கணிக்க போவ-தாக தெரிவித்தனர்.
மேலும், ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுப்பதிவு பெட்டிகளை இறக்கி வைக்கவும், எதிர்ப்பு தெரி-வித்தனர். இது குறித்து, தகவல் அறிந்து வந்த, பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார் மற்றும் பஞ்சப்பள்ளி போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் முடிந்த-வுடன் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து,
2 மணி நேரத்திற்கு பின், தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement