ஓட்டுப்பதிவு உபகரணங்களுடன் மரக்கன்றுகள் அனுப்பி வைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி உள்ள, 322 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள ஓட்-டுப்பதிவுக்கான உபகரணங்களுடன் பசுமை தேர்தலை வலியுறுத்தி, 1,610 மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட-சபை தொகுதியில் உள்ள, 322
ஓட்டுச்சாவடிகளில் இன்று,
ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள மின்னணு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஏற்-கனவே அனுப்பி வைக்கப்பட்டு, தொகுதி அலுவ-லகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இன்று நடக்கும் தேர்தலையொட்டி, நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டி-ருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவல-கத்தில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னி-லையில், தேர்தல் அதிகாரிகள், 'சீல்' இடப்பட்ட அறையை திறந்து, ஓட்டு பெட்டி இயந்திரத்-தையும், தேர்தல் அன்று ஓட்டுச்சாவடிகளில்,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயன் படுத்தும் படி-வங்கள், அடையாள அட்டை, வாக்காளர் பட்-டியல், எழுது பொருள்கள், விரல் மை, சீலிடும் பொருள்கள், ஸ்கேல், ஓட்டுப்பதிவு பாதுகாப்புக்-கான பேலட் சாதனத்திற்கான தடுப்பு அட்டை போன்ற, 35 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வெப்பமயமாதலை தடுக்க, பசுமை தேர்தலை வலியுறுத்தி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் முதலில் வந்து ஓட்டு பதிவு செய்யும், 5 வாக்காளர்களுக்கு வழங்கும் படி, ஒவ்வொரு ஓட்டு மையத்திற்கும், 5 மரக்-கன்றுகள் வழங்க, தேர்தல் பொது பார்வை-யாளர் ஹீராலால் உத்தரவிட்டிருந்தார்.
இதையொட்டி, 322 ஓட்டுச்சாவடிகளுக்கும், 1,610 மரக்கன்றுகளை மண்டல அலுவலர் டி.ஆர்.ஓ., கவிதா மேற்பார்வையில் தேர்தல் நடத்தும் அலு-வலர் கோவிந்தன் தலைமையில், தாசில்தார் பார்வதி உள்ளிட்ட அலுவலர்கள், 322 ஓட்டுச்சா-வடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement