காதல் மனைவியை கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட கணவன் சாவு
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, கடந்த, 19ம் தேதி, காதல் மனைவியை குத்தி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்று, மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர், நேற்று காலை உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த நலப்பநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் முரு-கேசன், 30. இவர்,
பென்னாகரத்திலுள்ள சலுானில் பணியாற்றி வந்தார்.
இவரது காதல் மனைவி, ஏரியூர் அருகே உள்ள பாகிபள்ளம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, 25. இவர்களுக்கு, 2 பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முருகேசன், கடந்த, 19ம் தேதி இரவு, 8:00 மணிய-ளவில், பாப்பாரப்பட்டி ஏரி அருகே உள்ள பெண்கள் பொதுகழிப்பிட கழிவறையில் விஜய-லட்சுமின் உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை, 6:00 மணிக்கு
உயிரிழந்தார்.
இதுகுறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசா-ரித்து
வருகின்றனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு