கோட்டூர் மலைக்கு டிராக்டரில் சென்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

பென்னாகரம்: கோட்டூர், ஏரிமலை, அலக்கட்டு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு, டிராக்டர மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டசபை தொகுதி, வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்-பட்ட ஏரிமலை, கோட்டூர்மலை, அலகட்டு என, மூன்று மலை கிராமங்கள் உள்ளன. இவை, செங்குத்தான மலைப்பாதைகளால் சூழப்பட்-டவை. கடந்த, 75 ஆண்டுகளாக இங்கு சாலை வசதி இல்லாததால், வாக்குப்பதிவு நேரங்களில் கழுதைகளில் ஓட்டு இயந்திரங்களை, 7 கி.மீ., தொலைவு சுமந்து கொண்டு செல்ல வேண்டி-யது இருந்தது. அதிகாரிகள் நடந்தே மலை உச்-சியை அடைந்து, ஓட்டுப்பதிவை நடத்தினர்.
இப்பகுதி கிராம மக்கள் சாலை, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக நீண்ட காலமாக போராடி வந்தனர். கடந்த ஓராண்-டுக்கு முன், டிராக்டர் செல்லும் மண் சாலை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்-கட்டு ஓட்டுச்சாவடிகளுக்கு மலை அடிவாரத்தி-லிருந்து டிராக்டரில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் அழைத்து
செல்லப்பட்டனர்.

Advertisement