580 மதுபாட்டில் பதுக்கியவர் கைது
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஏப்.,23) தேர்தல் நடப்பதையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய தடை விதித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், யாரேனும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், மாரண்ட-ஹள்ளி பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாரண்-டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகர-னுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாரண்டஹள்ளி பகுதியில் எஸ்.ஐ., பிர-பாகரன் தலைமையிலான போலீசார் சோத-னையில் ஈடுபட்டனர்.
இதில், பங்களா தெருவை சேர்ந்த ராஜி, 60, என்-பவரது வீட்டின் அருகிலுள்ள மாட்டு தொழு-வத்தில், 580 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்-தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜியை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறி-முதல் செய்தனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு