தவற விட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
திருத்தணி: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறவிட்ட கைப்பை மற்றும் பணத்தை, அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
திருத்தணி பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் பூங்கொடி, 35. இவர், நேற்று தன் 'ஸ்கூட்டி'யில் மகனை ஏற்றிக் கொண்டு திருத்தணி காந்திநகர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கைப்பை தவறி விழுந்தது. அந்த வழியாக நடந்து சென்ற சிவகாமி, 40, என்பவர், சாலையில் கிடந்த கைப்பையை எடுத்தார். அதில், 36,000 ரூபாய், மொபைல்போன், ஆதார் கார்டு ஆகியவை இருந்தது.
இதையடுத்து சிவகாமி, திருத்தணி போலீசாரிடம் கைப்பையை ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், பூங்கொடி கைப்பையை தவற விட்டது தெரியவந்தது. பின், பூங்கொடியிடம் அவரது கைப்பை ஒப்படைக்கப்பட்டது. சிவகாமியின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement