வடக்கு நரிப்பையூரில் உவர் நீர் விநியோகம்
சாயல்குடி: சாயல்குடி அருகே வடக்கு நரிப்பையூரில் உள்ள வீடுகளுக்கு உவர் நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நரிப்பையூர் மற்றும் கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரை அருகே இருந்தாலும் கிணறுகளில் இருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. அவற்றை லாரி மற்றும் டேங்கர்களில் சேகரித்து சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில் வடக்கு நரிப்பையூர் பகுதியில் குடிநீரை விநியோகம் செய்யாமல் உவர்நீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். வடக்கு நரிப்பையூர் மக்கள் கூறியதாவது:
இங்கு விநியோகிக்கப்படும் நீர் கடும் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. பயன்படுத்துவதற்கு முடியவில்லை. நரிப்பையூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சேகரிக்க கூடிய தண்ணீர் இதர பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் போது நரிப்பையூர் ஊராட்சி நிர்வாகம் உவர் நீரை விநியோகம் செய்வது சரியானது அல்ல.
டிராக்டர் மூலம் குடம் ரூ. 5க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே நரிப்பையூர் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
---
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது