பூத்களில் காட்சி பொருளான வீல் சேர்கள்: மாற்றுத்திறனாளிகள் சிரமம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பூத்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் பயன்படுத்த முடியாமல் காட்சி பொருளாக ஆனதில் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு ஓட்டு போட நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் 270 பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்களிலும் அனைத்து வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போடும் இடத்திற்கு செல்லும் வகையில் வீல் சேர், ரேம்ப் வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள பி.பி.வி., சாலா உயர்நிலை பள்ளியில் 4 க்கும் மேற்பட்ட பூத்கள் உள்ளன. இங்கு அதிக அளவில் நடக்க முடியாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட முடியாமல் சிரமப்பட்டனர். இவர்களுக்கு என்று வசதி செய்யப்பட்ட வீல் சேர் காட்சி பொருளாக ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. இதே போன்று புளியம்பட்டியில் உள்ள கம்மவார் பள்ளியிலும் வீல் சேர் பயன்படுத்தப்படாமல் மூலையில் இருந்தது. வீல் சேரில் அமர வைத்து மாற்றுத்திறனாளிகளை ஓட்டு போட வைப்பதில் அலட்சியம் காட்டி காட்டியதால், ஓட்டு போட சிரமப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள், அதிருப்தி அடைந்தனர்.
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது