சீமை கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

1

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. இந்த காயல்குடி ஆற்றினை நம்பி எதிர்கோட்டையில் பயிர்கள் பயிரிடப்படுகின்றது. தவிர குடிநீர் ஆதாரமும் கிடைத்து வருகிறது. மேலும் மோட்டார் பாசனத்திற்கும் ஆதாரமாக இருந்தது. இந்நிலையில் ஆறு முழுவதுமே சிறிதும் இடைவெளியின்றி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. துார்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement