இதய நோய் பரிசோதனை முகாம்

விருதுநகர்: விருதுநகர் ரோட்டரி சங்கம், மாதா அமிர்தானந்தமாயி அறக்கட்டளை இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதய நோய் பரிசோதனை முகாம் கே.வி.எஸ்., பள்ளியில் நடத்தியது.

இதில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் தினேஷ், சின்னதுரை அப்துல்லா, பாலசுப்பிரமணியன், சங்கர நாராயணன், முருகதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் கொச்சி அமிர்தானந்தமாயி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பாலாஜி ஸ்ரீமுருகன் தலைமையில் பாலகணேஷ் கார்மேகராஜ், நிசாந்த் செல்வம் ஆகியோர் பரிசோதனையை நடத்தினர்.

Advertisement