ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோமேட்டிக் டிக்கெட் இயந்திரம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க ஆட்டோமேட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இங்கு ரயில் வரும் நேரத்தில் டிக்கெட் எடுப்பதில் பயணிகள் படும் சிரமத்தை தவிர்க்க, தற்போது ஆட்டோமேட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் போது மூன்று சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். சாதாரண பயணிகள் ரயில்கள் முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் வரை அனைத்து வகை ரயில்களுக்கும் டிக்கெட் பெற முடியும்.

எனவே, பயணிகள் இந்த எந்திரத்தை பயன் படுத்தி டிக்கெட் எடுத்து சிரமமின்றி பயணிக்க முன் வர வேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement