கடன் வாங்குவதில் தப்பில்லை; எல்லா நாடுகளும் வாங்குகிறது; சொல்கிறார் சிதம்பரம்

45

நமது நிருபர்




கடன் வாங்குவதில் தப்பில்லை. எல்லா நாடுகளும் கடன் வாங்குகிறது. தமிழகம் மட்டும் கடன் வாங்க வில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் முதல் ஆளாக ஜனநாயக கடமை ஆற்றிய பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு நிலையான அரசு வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டும். இந்த மூன்று எதிர்பார்ப்புகள் தான் எதிரொலிக்கிறது. இந்த மூன்றையும் அளித்த திமுக அரசு மீண்டும் அமையும். இன்னும் ஐந்து ஆண்டுகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.


வரக்கூடிய அரசுக்கு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள் இருக்கிறார்கள். திறன் மிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். வரவு செலவு கணக்கை போடும்போது சொந்த வருவாய் மத்திய அரசின் வருவாய் இரண்டையும் கணக்கில் எடுத்து தேவையான வரவு செலவு கணக்கு போட வேண்டும். இது மத்திய அரசுக்கும் பொருந்தும். மாநில அரசுக்கும் பொருந்தும். நிலையான அரசு, வலிமையான அரசு உறுதியாக வரவு செலவு அழிக்கும். மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது.


கடன் வாங்குவதில் தப்பில்லை; எல்லா நாடுகளும் கடன் வாங்குகிறது. தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. சர்வீஸ் லோன் அதுதான் கணக்கு. இலவசம் என்பதை நான் மறுக்கிறேன். இலவசம் அல்ல பலமுறை சொல்லி இருக்கிறேன். யுனிவர்சல் பேசிக் இன்கம் தமிழகம் முழுவதும் அடிப்படை வருமானம், எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பி தருகிறார்கள். குறைந்தபட்ச வருமானம் எல்லோருக்கும் வருகிறது என்று பார்க்க வேண்டும். இலவசமாக பார்க்க கூடாது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Advertisement