கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
பொன்னேரி: பொன்னேரி சட்டசபை தொகுதியில், ஆண்கள் - 1,22,296, பெண்கள் - 1,29,066, மூன்றாம் பாலினத்தவர் - 35 என, மொத்தம் 2,51,397 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்காக 327 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில், 18 பதற்றமான ஓட்டுப்பதிவு மையங்களாக கண்டயறிப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் ஓட்டுப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஜனநாயக கடமையை செய்தனர்.
அண்ணாமலைச்சேரி, வைரவன்குப்பம், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் ஆகிய கிராமங்களில், இயந்திரங்கள் பழுதாகியதால், காலையில் ஓட்டுப்பதிவு பாதித்தது. இயந்திரங்களில் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, 30 நிமிடத்திற்கு பின் ஓட்டுப்பதிவு துவங்கியது. நேற்று பகல் 11:00 மணி வரை, 38 சதவீத ஓட்டுப்பதிவு முடிந்திருந்தது.
உப்பளம் கிராமத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு மையம், வன்னிப்பாக்கத்தில் பெண்களுக்கு என 'பிங்க்' ஓட்டுப்பதிவு மையம், கிருஷ்ணாபுரத்தில் பசுமை ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. நகரப்பகுதிகளை விட கிராமப்புறங்களில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு