திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்

திருப்போரூர்;திருப்போரூர் சட்ட சபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., வேட்பாளர் பன்னீர்தாஸ், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, த.வெ.க., வேட்பாளர் விஜயராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அம்பேத்ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வினோத்குமார், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 பேர் களத்தில் உள்ளனர்.

தொடர்ந்து, திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட, 369 ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், கொண்டு வரப்பட்டன.

திட்டமிட்டபடி நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்தனர். தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

ஏற்கனவே அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பில் உள்ள நிலையில், தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் 2000த்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை இராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



















Advertisement