வல்லம் ஓட்டுச்சாவடியில் முன்னேற்பாடின்றி மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில், வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாகம் எண்: 342, 343 ஆகிய இரண்டு ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களில் ஓட்டுகளை செலுத்தனர்.

இந்த நிலையில், காலை 10:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடியில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு போதிய முன்னேற்பாடு எதுவும் ஏற்படுத்தவில்லை. இதனால், முண்டி அடித்துக்கொண்டு கூட்டமாக வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண்கள் வயதானார் இதனால் பெரும் சிரமம் அடைந்தனர்.

அதேபோல, ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்ட குடிநீர் சிறிது நேரத்திலே காலியானது. இதனால், குடிக்க தண்ணீரின்றி வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.

தாமதம்....

ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் காலை 7:00 மணிக்கு துவங்கப்பட வேண்டிய ஓட்டுப்பதிவு, இயந்திரம் பழுதானதால் தாமதமானது.

இதையடுத்து, அரை மணி நேரத்திற்கு பின், 7:30 மணிக்கு ஒட்டுப்பதிவு காலதாமதமாக தொடங்கப்பட்டது. அதேபோல, வளர்புரம் அரசு பள்ளி ஓட்டுச்சாவடியில், இயந்திரம் பழுது காரணமாக 20 நிமிடங்கள் காலதாமதமாக காலை 7:20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

Advertisement