ஓட்டுப்பதிவு நாள் விடுமுறையால்அடைப்பு: வெளியூர் மக்கள் சிரமம்

ராமநாதபுரம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கடைகளுக்கு விடுமுறை அளித்து அடைக்கப்பட்டு இருந்ததால் வெளியூர்களில் இருந்து தங்கியுள்ளவர்கள் உணவுக்கு சிரமப்பட்டனர்.

(ஏப்.,23) தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர் துறை அறிவுறுத்தல் படி பொது விடுமுறையால் பெரும்பாலான உணவகங்கள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், ஜவுளி கடைகள் என பஜார், பஸ் ஸ்டாண்ட் ரோட்டில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, மதுரை, ராமேஸ்வரம் ரோட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உணவகங்கள் செயல்படாததால் வெளியூர் பயணிகள், லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளியூர்காரர்கள் டீ, சாப்பாடு வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அம்மா உணவகம், இயங்கிய சில ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகளில் சாப்பிட, பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். -----

Advertisement