திருமணம் முடிந்தவுடன் ஜனநாயக கடமை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 28; டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். உறவினரான பெங்களூரை சேர்ந்த சங்கீதா, 25 என்பவருடன் இவரது திருமணம் தாராபுரம், பார்க் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் காலை திருமணம் நடந்தது.

நேற்று திருமணம் முகூர்த்தம் முடிந்த கையுடன், தனது மனைவியை டூவீலரில் அழைத்து வந்து, ஐந்து முக்கு பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அருண்குமார் ஓட்டுபதிவு செய்தார்.

Advertisement