அவிநாசியில் இளைஞர்கள் ஆர்வப்பெருக்கு
அவிநாசி:அவிநாசி (தனி) தொகுதியில் காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு அதிரடி வேகத்தில் நடந்தது. குறிப்பாக, முதல்முறை வாக்களித்த இளைஞர்களின் பட்டாளம் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை உற்சாகத்துடன் நிறைவேற்றியது.
தொகுதி முழுவதும் உள்ள 179 வாக்கு மையங்களில், 372 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் மொத்தம் 1,372 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 483 'விவிபேட்' கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 7:00 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கி களைகட்டியது.
அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி துவக்கப்பள்ளி, செயின்ட் தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் மற்றும் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இளைஞர் கூட்டம் அலைமோதியது. தங்கள் முதல் வாக்கைச் செலுத்திய கையோடு, விரலில் வைத்த 'மை'யுடன் ஆர்வமாக 'செல்பி' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
தேர்தல் பணியில் 1,488 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சேவூர், பழங்கரை, கருவலுார், தெக்கலுார், ராக்கியாபாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 பதற்றமான வாக்குச்சாவடிகளில், துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இரண்டு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 2 இன்ஸ்பெக்டர்கள், 27 எஸ்.ஐ.,க்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் என மொத்தம் 274 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொகுதி முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்தனர்.
--
.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு