திருவிழா கூட்டமாக திரண்ட வாக்காளர்கள்
திருப்பூர்:திருப்பூர் வடக்குத் தொகுதியில் உள்ள 10 ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சியின் 29 வார்டுகளில் மக்கள் திருவிழா கூட்டம்போல் திரண்டு வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
ஆர்வமுள்ள வாக்காளர்கள்: பட்டம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகாலை 5:30 மணிக்கே மக்கள் வரிசையில் நின்றனர். பல பள்ளிகளில் 15-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்ததால், மையங்கள் மக்கள் கூட்டத்தால் அலைமோதின.
இயந்திரக் கோளாறு: மொய்யாண்டம்பாளையம் 20-வது பூத்தில் காலை 7:00 மணிக்கு இயந்திரம் 'மக்கர்' செய்ததால், 45 நிமிடம் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது.
வெயிலுக்குப் பயந்து: கோடை வெயிலால் மதியம் வரை கூட்டம் அலைமோதியது; உச்சி வெயிலில் சற்று குறைந்த கூட்டம், மாலை 4:00 மணிக்கு மேல் மீண்டும் அதிகரித்தது.
கரைவேட்டி பஞ்சாயத்து: அக்ரஹாரப்புத்தூர் மையத்தில் கரைவேட்டி கட்டி வந்த நிர்வாகிகளைப் போலீசார் தடுத்தனர். வேட்டியுடன் அனுமதிக்காவிட்டால் ஓட்டளிக்க மாட்டோம் என முன்னாள் ஊராட்சித் தலைவர் மருதாசலமூர்த்தி வாக்குவாதம் செய்ததையடுத்து, அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
கெடுபிடி: அக்ரஹாரப்புத்துாரில் பணியில் இருந்த போலீசார், விடுபட்ட வாக்காளருக்கான 'பூத் சிலிப்' வினியோகம், 100 மீட்டருக்கு அப்பால் நடக்க வேண்டுமென, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களையே வெளியே அனுப்பி வைத்தனர்.
அதிருப்தி: சின்னச்சாமியம்மாள் பள்ளியில் வாக்களித்துவிட்டு காத்திருந்தவர்களையும், கால் வலியால் அமர்ந்திருந்த முதியவர்களையும் போலீசார் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது அதிருப்தியை ஏற்படுத்தியது.
மருத்துவ முகாம்: பெரிய மையங்களில் டாக்டர் மற்றும் செவிலியர்களுடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தன்னார்வலர் தட்டுப்பாடு: சக்கர நாற்காலிகளை இயக்கத் தன்னார்வலர்கள் இல்லாததால், துப்புரவுப் பணியாளர்களே அந்தப் பணியைச் செய்தனர். போலீசார் 'பூத் சிலிப்' வழங்கிய அலுவலர்களை 100 மீட்டருக்கு அப்பால் விரட்டியடித்த நிகழ்வும் நடந்தது.
.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு