ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ராஜூநகர் காலனியில் உள்ள ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம், 30ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி இம்மாதம், 28ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, மங்கல இசை, முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, ராஜ விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, திருமுறை பாராயணம், தீபாராதனை நடக்கிறது. 29ம் தேதி காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, சோம பூஜை, துவார பூஜை நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மேல் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
30ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பஞ்சகவ்ய பூஜை, துவார பூஜை, மண்டபார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மேல் ராஜ விநாயகர் கோயில் விமானம், நவகிரக விமானம், பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:45 மணி முதல், 10:15 மணிக்குள் ராஜ விநாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை, 27 நாட்கள் நடக்கிறது.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு