வங்கதேசம் மரத்தில் சடலமாக தொங்கிய ஹிந்து கோவில் காவலாளி
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாயமான ஹிந்து கோவில் காவலாளி ஒருவர், வனப்பகுதியில் உள்ள மரத்தில் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள 'புலிஷோரா கோனா நாக பஞ்சமி' கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் நயன் தாஸ், 35. கடந்த 19ம் தேதி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நயன் தாஸ் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் தேடி வந்த நிலையில் மரத்தில் சடலமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் கடத்தப்பட்ட அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு
Advertisement
Advertisement