கபடி: இந்தியா வெற்றி * ஆசிய பீச் விளையாட்டில்

சான்யா: ஆசிய பீச் விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் முதல் வெற்றி பெற்றன.
சீனாவின் சான்யா நகரில் 6வது ஆசிய பீச் விளையாட்டு நடக்கிறது. 45 நாடுகளில் இருந்து 1790 பேர் பங்கேற்றுள்ளனர். 14 விளையாட்டில் 62 பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. இந்தியா சார்பில் 4 போட்டிகளில் 18 வீரர், 13 வீராங்கனைகள் என மொத்தம் 33 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான கபடி முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. முதல் பாதியில் 21-16 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 44-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான பிரிவில் இந்திய அணி, தென் கொரியாவை சந்தித்தது. இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 68-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement