ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
பாலக்காடு: பாலக்காடு அருகே, ஊஞ்சலாடும் போது கழுத்தில் கயிறு இறுக்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நல்லேப்பள்ளி தெற்கு தெருவை சேர்ந்த, கருப்புசாமி - பிரியா தம்பதியின் மகன் அபினவ், 10. கொழிஞ்சாம்பாறை தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
அபினவ் நேற்று காலை வீட்டிற்குள் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த போது கயிறு கழுத்தை இறுக்கியது. மயக்கமடைந்த நிலையில் குடும்பத்தினர், உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த கொழிஞ்சாம்பாறை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
-
கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
-
இலவசம் என கூறாதீர்; 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'
-
தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்
-
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது
-
தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு
Advertisement
Advertisement