ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் ஆகிய தொகுதிகளில் நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவை அடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement