கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
மேடவாக்கம்: ஜல்லடியன்பேட்டை, பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா, 77. இவர், மேடவாக்கத்தில் உள்ள பூக்கடைகளில், பூ கட்டும் வேலை செய்து வந்தார்.
இரு மாதங்களாக, மேடவாக்கம்- - மாம்பாக்கம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள, பூ கடையில் வேலைக்கு பார்த்தபடி, அங்கேயே தங்கி வந்துள்ளார்.
நேற்று காலை 9:30 மணியளவில் கடை உரிமையாளர் மனோகரன், கடையை திறந்தபோது, உடலில் ரத்த காயங்களுடன் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து வந்த மேடவாக்கம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
Advertisement
Advertisement