மாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
பாமகோ: மாலி நாட்டின் தலைநகர் பாமகோ உட்பட முக்கிய நகரங்களில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது.
ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. ராணுவ ஆட்சிக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் குழுவினர் முன்னெடுத்துள்ளனர். மாலி தலைநகர் பாமகோ, நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து நேற்று ஆயுதமேந்திய கும்பல் அதிரடித் தாக்குதலை நடத்தியது.
ராணுவcd, ஹெலிகாப்டர்கள் மூலம் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. வடக்கு மாலியில் உள்ள கிடால் நகரில், கிளர்ச்சியாளர்கள் பல ராணுவ நிலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பெரிய அளவிலான தாக்குதலில் அல் - -கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம்., அமைப்பு இணைந்து செயல்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்யாவின் ஆதரவை நம்பியுள்ள மாலி அரசு, அமெரிக்காவுடன் உளவுத் தகவல்களை பகிரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வன்முறை வெடித்துள்ளது.
மேலும்
-
திருச்சூர் பூரம் திருவிழா தொட க்கம் யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் பழனிசாமி கடும் கண்டனம்
-
பாலாஜி, ஆளூர் ஷாநவாசுக்கு வி.சி.க.,வில் முக்கிய பொறுப்பு
-
ஈரோடு அருகே கட்டட பணியில் விபத்து மேஸ்திரி, பெண் தொழிலாளி பரிதாப பலி
-
ஏரியில் மூழ்கி பெண் சாவு
-
திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்