திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது. பூரம் விழாவை முன்னிட்டு பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டி போட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான 'யானைச்சமயம்' நேற்று முன்தினம் துவங்கியது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
நேற்று காலை 8:00 மணிக்கு நெய்தலைக்காவு பகவதி அம்மன், குற்றுாரில் இருந்து, ஆடை, ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது, வடக்குநாதர் சன்னிதி நோக்கி புறப்பட்டார்.
செண்டை மேளத்துடன், வழித்தடத்தில் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். மதியம் 12:45 மணிக்கு மணிகண்டனால் பகுதியை அடைந்த அம்மன், கணபதி கோவில் அருகே நின்றதும், செண்டைமேளம் முழங்க துவங்கியது.
அதன்பின், அம்மன் வடக்குநாதரின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து, தெற்கு கோபுர நடை வழியாக வெளியேறிய யானை, துதிக்கையை உயர்த்தி மூன்று நாள் பூரம் திருவிழா துவங்கியதை அறிவித்தது.
இன்று, காலை இதே கோபுர நடை வழியாக, உற்சவர் கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன், பூரத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் துவங்குகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றம் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது.
மேலும்
-
அண்ணாமலை எம்.பி.,யாக வாய்ப்பு: ஆந்திராவில் இருந்து தேர்வாவாரா?
-
குப்பை வண்டி நிறுத்தும் இடமான வங்கனுார் கிளை நுாலகம்
-
திருத்தணி உபகோவிலில் பராமரிப்பு கேள்விக்குறி
-
வீரராகவபுரம் மாதா கோவில் ஏரியில் மண் திருட்டு ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து அதிகாரிகள் அட்டூழியம்
-
கழிவுகளால் சீரழியும் தேர்வழி கிராம ஏரிகள் சீரமைத்து பாதுகாக்க மக்கள் கோரிக்கை
-
வீரராகவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம்